வாட்ஸ் அப் மூலம் எல்ஐசி பிரீமியம் செலுத்தும் வசதி அறிமுகம்

x

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி., வாட்ஸ் அப் பாட் மூலம் பிரீமியம் செலுத்தும் ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்.ஐ.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான சித்தார்த் மொஹந்தி, இயக்குநர்கள் ஜெகநாத், தப்ளேஷ் பாண்டே, சத் பால் மற்றும் துரைசாமி ஆகியோர் இந்த புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்தனர்.

எல்.ஐ.சி. போர்ட்டலில் வாடிக்கையாளர்கள், வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி, தாங்கள் செலுத்த வேண்டிய பாலிசிகளை கண்டறியலாம். அதேபோல், வாட்ஸ் அப் பாட்டில் உள்ள யுபிஐ அல்லது பேங்கிங் கார்டு மூலமாக நேரடியாக பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்