பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட பெண் - கணவர் கைவிட்டு சென்றதால் செய்வதறியாது தவிப்பு

மதுரையில் பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட கணவன் கைவிட்டு சென்றதால் செய்வதறியாது தவித்து வருவதாக 8 மாத கர்ப்பிணி பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட பெண் - கணவர் கைவிட்டு சென்றதால் செய்வதறியாது தவிப்பு
Published on

மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த சத்யா என்ற பெண் அப்பகுதியில் ப்யூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். அவருடன் மேலூர் தற்காகுடியை சேர்ந்த உதயகுமார் என்பவர் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்யா கர்ப்பமாக அவருக்கு தெரியாமல் கணவர் உதயகுமாரை அவரது தந்தை பாண்டிகுமார் பிரித்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த சத்யா போலீசில் புகார் அளித்தார். உதயகுமாரை அழைத்து போலீசார் விசாரித்த போது தாயை பார்க்க ஊருக்கு போவதாகவும், 4 நாட்களில் திரும்பி வந்து விடுவதாகவும் எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வராததால் கணவர் உதயகுமாரை தேடி அவரது வீட்டிற்கு சத்யா சென்றுள்ளார். அங்கு உதயகுமாரின் தந்தை பாண்டிகுமார் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி 30 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த சத்யா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com