பேஸ்புக் காதலனை பார்க்க சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - காதலனை சந்திக்க உதவுவதாக கூறி பாலியல் பலாத்காரம்

பேஸ்புக் காதலனை பார்க்க விரும்பிய பள்ளி மாணவிக்கு உதவுவதாக கூறி காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேஸ்புக் காதலனை பார்க்க சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - காதலனை சந்திக்க உதவுவதாக கூறி பாலியல் பலாத்காரம்
Published on

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயதான பள்ளி மாணவிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகி இருக்கிறார் ஒசூரை அடுத்த தரணி என்ற இளைஞர். தொடர்ந்து இவர்களின் உரையாடல்கள் காதலாக மாறவே, நேரில் சந்திக்க விரும்பியுள்ளனர். இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் அறிமுகமாகியிருக்கிறார் கோழிக்கோட்டை சேர்ந்த விபின்ராஜ் என்ற இளைஞர். அவரிடன் தன் காதலனை சந்திக்கும் திட்டம் குறித்து மாணவி கூறவே, அவருக்கு உதவுவதாக கூறி வரவழைத்துள்ளார். காரில் மாணவியை ஏற்றிக் கொண்டு சென்ற விபின்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள், காரிலேயே மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை நடுவழியிலேயே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காதலன் தரணியிடம் மாணவி நடந்ததை கூறவே, அவர் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மகளை காணாமல் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அவர் இருக்கும் இடம் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார், காதலன் தரணியை கைது செய்தனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்த விபின்ராஜ், அஜித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com