கணவன் கழுத்தை அறுத்த மனைவி.. சாவுக்கு நிகரான நரக தண்டனை கொடுத்த கோர்ட்

ஓசூர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கழுத்து அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஐயப்பன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி ரூபா, கள்ளக்காதலன் தங்கமணி இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து, ரூபாவை கோவை பெண்கள் சிறையிலும், தங்கமணியை சேலம் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com