வெடித்து சிதறிய டாய்லெட் - கசிந்த மீத்தேன்..தடுப்பது எப்படி?
சில நேரங்கள்ல சில செய்திகள பார்க்கும்போது இப்படிலாம் கூட நடக்குமான்னு நம்மளயே யோசிக்க வைக்கும் அந்த மாதிரியான ஒரு சம்பவம் தான் உத்திர பிரதேச மாநிலத்துல நடந்திருக்கு.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவ அடுத்த பிஷ்ராக் பகுதியில வெஸ்டர்ன் டாய்லெட் திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சிய ஏறபடுத்தி இருக்கு. அப்ப கழிவறையை பயன்படுத்திக் கொண்டிருந்த அஷு நகர் என்ற இளைஞருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. அஷூ கழிவறையை உபயோகிச்ச அப்புறமா டாய்லெட்டில் உள்ள பிளாஷை அழுத்தி இருக்குறாரு திடீரென வெஸ்டர்ன் டாய்லெட்டில் தீப்பிடித்து எறிஞ்சு இருக்கு.
தீப்பிடிச்சு எரிஞ்சது மட்டுமில்லாம கொஞ்ச நேரத்திலேயே வெஸ்டர்ன் டாய்லெட் வெடிச்சு துண்டு துண்டாக சிதறியதுசிதறி இருக்கு. இந்த சம்பவத்தில் இளைஞரின் முகம் கை கால் மற்றும் அந்தரங்க உறுப்பு ஆகியவற்றில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர் ஜிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்த மீத்தேன் கேஸ் காரணமாக தீப்பிடித்து எரிந்து இந்த வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் சொல்லபடுது. கிரேட்டர் நொய்டா பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதாகவும் இதன் காரணமாக குழாய்களில் சேர்ந்துள்ள மீத்தேன் கேஸ் காரணமாக இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
