சென்னைஸ் அமிர்தா விமானக் கல்லூரியில் பிரத்யேக ஃபேஷன் ஷோ

x

chennaisamirta | aviation | college | சென்னைஸ் அமிர்தா விமானக் கல்லூரியில் பிரத்யேக ஃபேஷன் ஷோ

சென்னைஸ் அமிர்தா விமான கல்லூரியில் ஃபேஷன் இன்ஸ்டா என்ற பெயரில் நடைபெற்ற பிரத்யேக பேஷன் ஷோவில் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். சென்னை அண்ணாசாலையில், சென்னைஸ் அமிர்தா விமான கல்லூரியில் விமான நிலையம் முதல், விமானம் வரையிலான அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகளுடன் கூடிய செயல்முறை சார்ந்த கல்வியை சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் வழங்கி வரும் நிலையில் இந்நிறுவனத்தில், விமான தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிரத்தியேக பேஷன் ஷோ நடைபெற்றது. கேபின் க்ரூ எனப்படும் விமானி, விமான பணிப்பெண்,மற்றும் ஊழியர்கள் போல் உடை அணிந்த மாணவர்கள் மாடல் விமானத்திலிருந்து வெளியே வந்து ராம்பில் ஒய்யார நடை போட்டு , நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அணிக்கு, நடிகை அனிதா சம்பத் மற்றும் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாமஸ் ராஜ் மற்றும் அம்ருத் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

தங்களின் சர்வதேச பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர் எனவும், அதிநவீன வசதிகளுடன் கூடிய செயல்முறை சார்ந்த கல்வியை சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் வழங்கி வருவதாகவும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவிதா நந்தகுமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்