``திருட்டு பழக்கம் தவிர வேறெந்த கெட்ட பழக்கமும் இல்லை'' - போலீசிடம் திருடன் சொன்ன வார்த்தை
சென்னை அம்பத்தூர் அருகே, மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயலட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான ரூடா. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவரது தங்க செயினை, மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அஜய் என்பவரை கைது செய்தனர். விசாரணையின் போது தான் திருடியதை ஒப்புக் கொண்ட அஜய், தனக்கு திருட்டு பழக்கம் தவிர வேறெந்த கெட்டுப்பழக்கமும் இல்லையென தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் தங்க செயினை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story