

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சுந்தர்ராஜன் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த சுந்தர்ராஜன், தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.