"எல்லாமே English-ல இருந்துச்சு.. நா படிச்சது தமிழ் மீடியம்"

x

சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ஜே.இ.இ. தேர்வில் வெற்றிப்பெற்று ஐஐடியில் பயில தேர்வாகியுள்ளார்.

ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியைச் சேர்ந்த ஆண்டி - கவிதா தம்பதியின் மகள் ராஜேஸ்வரி. பொறியியல் பயில விரும்பிய இவர், ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 417வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், கடின உழைப்பினாலும், ஆசிரியர்கள் வழிகாட்டுதல்களாலும், தான் இந்த தேர்வில் வெற்றி பெற்றதாக மாணவி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்