பெரியாருக்கே திருஷ்டி பொம்மையா? - அமைச்சர் என்ட்ரிக்கு பின் நடந்த மாற்றம்
பெரியாருக்கே திருஷ்டி பொம்மையா? - அமைச்சர் என்ட்ரிக்கு பின் நடந்த மாற்றம்
கோவையில் பெரியார் நூலக கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த திருஷ்டி படத்தால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, அந்த படம் அகற்றப்பட்டது. கோவை காந்திபுரத்தில் பெரியார் நூலக கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெரிய அளவில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருந்தது. பெரியாரின் பெயரில் அமையும் நூலக கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருந்தது பேசுபொருளானது. கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் இதுகுறித்து கேட்டதற்கு, திருஷ்டி படத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஒப்பந்தக்காரர்கள் நம்பிக்கை அடிப்படையில் அந்த படத்தை வைத்துள்ளனர் என்று பதில் அளித்தார். ஆய்வை முடித்துக் கொண்டு அமைச்சர் சென்ற பிறகு கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த திருஷ்டி படம் முழுவதும் அகற்றப்பட்டு விட்டது.
