கொட்டும் மழையிலும் விடாப்பிடியாக நிற்கும் பெண்கள் - மயக்கம் போட்டும் ஒலிக்கும் குரல்
கொட்டும் மழையிலும் 2வது நாளாக போராட்டம் - மயங்கி விழுந்த பெண்
சென்னையை அடுத்த ஆவடி அருகே, தனியார் தொழிற்சாலையில் இரண்டாவது நாளாக பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளானூர் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை, தாம்பரம் மெப்ஸ் பகுதிக்கு மாற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாளில், கட்டுவிரியன் பாம்பு தொழிலாளர்கள் மீது ஏறி சென்ற நிலையில், இரண்டாவது நாளில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜான்சி என்பவர் திடீரென மயங்கி விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அவருக்கு தண்ணீர் கொடுத்ததும்
Next Story