``உங்க புருஷனாவே இருந்தாலும் டேஞ்சர் தான்’’ Chat செய்யும் பெண்களுக்கு அதிர்ச்சி
“கணவராக இருந்தால் கூட உங்கள் போட்டோக்களை அனுப்பாதீர்“
பெண்கள் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை காதலராகவோ கணவராகவோ இருந்தால் கூட அனுப்பக்கூடாது என சென்னை காவல்துறை துணை ஆணையர் வனிதா கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சமுதாய கல்லூரியில் குடும்ப ஆலோசனை மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா காலத்திற்கு பிறகு பெண்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகிறது, காதல் விவகாரத்தால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் வருகிறது. வெளிநாட்டு சர்வரில் பதிவாகும் உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களால் பிரச்னை ஏற்பட்டால், அவற்றை நீக்குவது மிகவும் கடினம் என கூறினார்.
Next Story
