``3 மாசம் ஆனாலும் பாடி இங்க தான் இருக்கும்.. மறு பிரேத பரிசோதனை வேணும்’’ - பைக் ஷோரூமில் மரணம் குழந்தையோடு கதறும் மனைவி

x

ஷோரூம் ஊழியர் உயிரிழப்பு - உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி பைக் ஷோரூம் ஊழியர் பலியான சம்பவத்தில், மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் வி.மருதூரில் வசித்து வந்தவர் கன்னியப்பன். தனியார் பைக் ஷோரூமில் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இவர், திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை 3 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு வீடியோவுடன் மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்