"செத்தாலும் இங்க தான்.." | கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட பெண்கள்

x

அண்ணாமலையார் மலையின் மீது கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து, 300க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. திருவண்ணாமலை மலை மீது அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆயிரத்து 535 வீடுகளையும் அகற்ற உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக 143 வீடுகளுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை ரத்து செய்ய மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்