"அரசு சேவை இல்லத்தில் பாலியல் சம்பவத்திற்கு பிறகும் சிசிடிவி செயல்படவில்லை" பெற்றோர் குற்றச்சாட்டு
அரசு சேவை இல்லத்தில் பாதுகாப்பு குறைபாடு - பெற்றோர் புகார்
சிட்லபாக்கம் அரசு சேவை மையத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகும், மையத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில்13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்ட நிலையில், இல்லத்தில் இருக்கும் மற்ற மாணவிகளை பார்க்க வந்த உறவினர்களை அனுமதிக்காமல் வெளியே காக்க வைத்துள்ளனர். மேலும் பாலியல் தொல்லை சம்பவத்திற்கு பிறகும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை எனவும், அரசு சேவை இல்லத்தில் பாதுகாப்பகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story