Govt Staff Salary| `இத்தனை' லட்சம் சம்பளம் வாங்கியும் பத்தலயாம்..லஞ்சத்தால் அம்பலப்பட்ட அரசு ஊழியர்

x

ரூ.20,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளரின் சம்பளம் ரூ.2.91 லட்சம்

கோவையில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன், சுமார் 3 லட்ச ரூபாய் சம்பளம் பெறுவது தெரியவந்துள்ளது. நிலத்தின் நடுவே அமைந்துள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க ஒப்புதல் தருவதற்காக செந்தில் பிரபு என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சபரி ராஜன் பிடிபட்டார். தற்போது, அவருடைய சம்பளப் பட்டியல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாதம் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஓர் அரசு அதிகாரி, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்