300 சவரன் நகையோடு எஸ்கேப்... நைசாக பொங்கல் பரிசு வாங்க வந்த போது மடக்கி பிடித்த மதுரை மக்கள்

x

300 சவரன் நகையோடு எஸ்கேப்... நைசாக பொங்கல் பரிசு வாங்க வந்த போது மடக்கி பிடித்த மதுரை மக்கள்

மதுரை அருகே அடகு கடை நடத்தி 300 சவரன் நகையோடு குடும்பத்துடன் தலைமறைவானவரின் தாயார், பொங்கல் பரிசு பணம் வாங்கவந்த போது சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோழவந்தான் அருகே இரும்பாடி பகுதியில் ஜீவானந்தம் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வந்தார்.

அடகு வைக்கப்பட்ட 300 சவரன் நகையுடன் ஜீவானந்தம் குடும்பத்துடன் திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாயை வாங்க ஜீவானந்தத்தின் தாயார் காரில் ரேசன் கடைக்கு வந்துள்ளார்.

இதனை பார்த்த பாதிக்கப்பட்ட பெண்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஜீவானந்தத்தின் தாயரை மீட்டு போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்