

நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கும் இ - சஞ்சீவனி திட்டத்தில் அதிகம் பேர் மருத்துவ ஆலோசனை பெற்ற மாநிலமாக தமிழகம் 3 வது இடம் பிடித்ததுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் இ- சஞ்சீவனி திட்டத்தின் மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெறும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி அதிகம் பேர் ஆலோசனை பெற்ற மாநிலங்களில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. ஆந்திராவில் இதுவரை 27லட்சத்து 51ஆயிரத்து 271 பேர் ஆலோசனை பெற்றுள்ளனர்.2வது இடமான கர்நாடகத்தில் 19 லட்சத்து 39ஆயிரத்து 444 பேரும், 3 வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 14 லட்சத்து 76 ஆயிரத்து 227 பேரும், ஆலோசனை பெற்றுள்ளனர். அதிகம் பேர் ஆலோசனை பெற்ற முதல் 50 மாவட்டங்களில் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இதன்படி 2 லட்சத்து 34ஆயிரத்து 736 பேருடன் சேலம் 5 வது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து மதுரை,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.