ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முன்னேற்பாடுகள் தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், 237 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது, தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் வேகமெடுத்துள்ளன. வாக்குச்சாவடிக்கு வெளியே வாகனங்களை தடுக்கும் விதமாக, சாலைகளில் 100 மீட்டர் , 200 மீட்டர் போன்ற தொலைவுகளை குறிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Next Story
