ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக புள்ளி

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுயேட்சையாக போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகனின் வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டது. கடந்த 2023 இடைத்தேர்தலில், ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், பின்னர் அதிமுகவில் இணைந்து மாநகர எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை தொடர்ந்து, சுயேட்சையாக செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரது வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டதையடுத்து, தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்