2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
Published on
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணை கடந்த மாதம் 14-ம் தேதி 102 அடியை எட்டியது. இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் தற்போது இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து மூன்று ஆயிரத்து 342 கன அடியாகவும், நீர் இருப்பு 30 புள்ளி 3 டிஎம்சியாகவும் உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com