பார்ப்பவர்களை கவர்ந்த பச்சை.. வள்ளி கும்மியில் அசத்திய பெண்கள்

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் வள்ளிகும்மியாட்ட குழுவினரின் 93வது அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் முருகன் வள்ளி திருமணத்தை நாட்டுப்புற பாடல்கள் வழியாக பாடியவாறு வள்ளிகும்மியாட்டம் அரங்கேற்றினர். அனைவரும் பச்சை நிற ஆடையில் ஓரே கும்மியடித்து ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது. மேற்கு மண்டலத்தில் பெரும் அளவில் உள்ள இந்த கலைக்கு அரசு அங்கீகாரம் அளிக்கும் வேண்டும் என கும்மியாட்ட குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com