Erode | கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த படுபயங்கரம் - சம்பவ இடத்திலேயே சரிந்த தந்தை..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கே.என்.பாளையத்தை சேர்ந்த வேதாண்டி என்கிற ஐயப்பன், தனது மகன் மாதேஷ் உடன் பெரும்பள்ளம் அணைக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அணைக் காவலர் சக்திவேலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது உறவினர்களான சௌந்தரராஜன், கௌதம் ஆகியோருடன் சேர்ந்து
ஐயப்பன் மற்றும் மாதேஷை அரிவாளால் வெட்டிய சக்திவேல், தப்பியோடியதாக தெரிகிறது. ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாதேஷ் படுகாயம் அடைந்தார். தலைமறைவான மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
