ஈரோட்டில் உடைந்த குட்டு.. தமிழகம் முழுக்க இதே வேலையா தான் இருக்கீங்களா?

x

ஈரோட்டில் மானியத்துடன் கடனுதவி எனக்கூறி 3கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் அப்துல் கலாம் அறக்கட்டளை என்ற பெயரில் 5ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்குவதாக கூறியுள்ளனர்.இதை நம்பி கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் லதா ஆகியோர் 25ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர். பல மாதங்களாகியும் கடனுதவி வழங்காதததால் பணம் செலுத்தியவர்கள் மோசடி செய்த அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அப்போது தமிழகத்தில் பல்வேறு கிளைகள் மூலம் 500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 3கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்