டைவர்ஸ் தராத மனைவியை.. கோர்ட்டிலேயே புரட்டி எடுத்த கணவன்
கோபிச்செட்டிபாளையத்தில் விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மனைவியை தாக்கிய கணவரை காவலர்கள் பிடித்துச் சென்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த காவலர் உமேஷுக்கும் கோபியைச் சேர்ந்த சவுந்தர்யாவிற்கும் கடந்த 2022-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், உமேஷ் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டதற்கு, அவர் தர மறுத்ததால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த சவுந்தர்யாவை உமேஷ் தாக்கியுள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் உமேஷை பிடித்துச் சென்றனர்.
Next Story
