Erode | Temple Bull | ட்ரைனிங் கொடுக்கும் பழைய காளை | சொன்னபடி கேட்கும் புதிய காளை

சென்னிமலை முருகன் கோயில் புதிய திருமஞ்சன காளைக்கு பயிற்சி சென்னிமலை முருகன் கோவிலின் புதிய திருமஞ்சன காளைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது... ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மூலவர் அபிஷேகத்திற்காக மலை அடிவாரத்தில் இருந்து ஆயிரத்து 320 படிகள் வழியாகக் காளையின் முதுகில் தீர்த்தக் குடங்களைச் சுமந்து செல்லும் நூற்றாண்டுப் பழமையான மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பணியில் உள்ள காளைக்கு வயது முதிர்வு ஏற்பட்டுள்ளதால், புதிய காளையைத் தயார் செய்யும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய இளங்காளையைத் தேர்ந்தெடுத்து, கடந்த மூன்று மாதங்களாகச் சிறப்பு உணவுகள் வழங்கிப் பராமரித்து வருகின்றனர். தற்போது பழைய காளையுடன் சேர்த்து, புதிய காளைக்கும் மலைப்பாதையில் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com