

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் இருந்து கவுந்தப்பாடிக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தினமும் ஒருமுறை மட்டுமே பேருந்து வந்து செல்வதால், சரியாக பள்ளிக்கு செல்ல இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.