

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களை அந்த யானை துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் யானை சுற்றித்திரியும் பகுதியில் உள்ள சாலைகளில் செல்லும் கிராம மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க தலமலை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.