ச​த்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைந்த முதியவர் மீட்பு

ஈரோடு மாவட்டம் ச​த்தியமங்கலம் அருகே சாலையோரம் கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மனிதாபிமான செயல் அந்தப் பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ச​த்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைந்த முதியவர் மீட்பு
Published on
தாளவாடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கிழிந்த ஆடைகளுடன் சுற்றித் திரிந்துள்ளார். நீண்ட தாடியும், பரட்டை தலையுடன் சாலையோரம் படுத்திருந்த அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. 2 மாதங்களாக இப்படி சுற்றித் திரிந்த அந்த முதியவரை, தாளவாடி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் மீட்டனர். அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகள் அணிவித்து அழகு பார்த்த ஊழியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர், யார், எந்த ஊர், உறவினர்களால் கைவிடப்பட்டவரா எந்த விவரமும் இல்லை.108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மனிதாபிமானமிக்க செயல், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com