

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர். உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓசூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுனர் அஜித்தை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.