

ஈரோடு, பெரிய சேமூர் சோழா நகரைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இவரை அணுகிய சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய கோகுல கண்ணன் சுமார் 7 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் பணி நியமன ஆணை ஒன்றை அந்த கும்பல் கோகுல கண்ணனிடம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் நாடார்மேடு, திலகர் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் அவரது தந்தை ரவிக்குமாரை சூரம்பட்டி போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.