

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணாரி அம்மன் கோவிலில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றி திரிவதாக, சமூக சேவகர் சொக்கலிங்கம் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்ற சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினர் மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை, பிடித்து, சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 7 பேரும், விழுப்புரத்தில் உள்ள, அன்புஜோதி ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர்.