தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக உயிரிழந்த நிலையில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்
Published on

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமாக உயிரிழந்த நிலையில், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளமுருகன் என்பவர் வேலை பார்த்து வந்த, தனியார் ஜவுளி நிறுவனத்தில், பல லட்ச ரூபாய் கையாடல் நடந்ததாக புகார் எழுந்ததால், ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, இளமுருகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், போலீசார் 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், போராடியவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com