அடைக்கலம் கோரி வந்த பெண்ணின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்

ஈரோடு மாவட்டம் ​பெருந்துறையை சேர்ந்த ​ஹேமலதா என்பவ​ர், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2013-ல், காதலனோடு தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜுவிடம் உதவி கேட்டு வந்துள்ளார்.
அடைக்கலம் கோரி வந்த பெண்ணின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்
Published on
ஈரோடு மாவட்டம் ​பெருந்துறையை சேர்ந்த ​ஹேமலதா என்பவ​ர், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2013-ல், காதலனோடு தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜுவிடம் உதவி கேட்டு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யுவராஜா ஹேமலதா பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஹேமலதாவின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையதில் அளித்த புகாரில், யுவராஜா கைழ செய்யப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்த வழக்கு விசாரணையை, நீதிபதி சாந்தி மார்ச் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தார். யுவராஜை பார்க்க அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பான நிலை காணப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com