

தற்கொலை செய்து கொண்ட குணசேகர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக நடை பயிற்சிக்கு செல்லும் குணசேகர் சம்பவத்தன்று நேராக தங்கும் விடுதிக்கு சென்று ஊழியர்களிடம் எத்தனை பேர் லாட்ஜில் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை கேட்டுள்ளார். பின்னர் 3-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து சுவற்றின் மீது ஏறி கீழே குதித்துள்ளார். இதில் சாலையில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.