குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்

ஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்
Published on
ஈரோடு பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது அண்ணன் மனைவியான லட்சுமி, கணவருடன் வாழாமல் வேறொருவருடன் சென்று விட்டார். இந்நிலையில் தமது அண்ணியை பேசி சமாதானம் செய்து செல்வக்குமார் அண்ணனுடன் சேர்ந்த வாழ வேண்டும் என கூறி, வீட்டிற்கு கடந்த 3 ஆம் தேதி அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று செல்வக்குமார் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த போது, அண்ணி லட்சுமி உள்ளிட்ட உறவினர்கள், அவரை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஈரோடு போலீசார், அண்ணி லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com