பால் வண்டியில் மூட்டை மூட்டையாக அரிசி.. அதிகாரிகளே அரண்ட மெகா திருட்டு!
ஈரோடு அருகே, சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேரை ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர். வாவிக்கடை பகுதியில் செயல்படும் அரிசி அரவை ஆலையில் நடத்திய சோதனையில் அங்கிருந்து 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை வீடு வீடாகச் சென்று வாங்கி வந்து அதனை பால் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் மூட்டை மூட்டையாக ஏற்றிக் கொண்டு வெளிமாநிலங்களுக்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நெல் அரவை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
