"மூச்சு பேச்சு இல்லாம இருந்தா"..தடுப்பூசியால் உயிரிழந்ததா குழந்தை..?கதறி அழுத தாய்..வேதனை பேட்டி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தடுப்பூசி செலுத்தியதால், பிறந்து இரண்டரை மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். வெள்ளியம்பாளையம் புதூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி செலுத்திய நிலையில், குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலம் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், தடுப்பூசி செலுத்திய மற்ற 5 குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், தடுப்பூசியில் எந்த பிரச்சினையும் இல்லை என ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Next Story
