

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி மகா தரிசனம் நடைபெற்றது. நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.