Erode | CCTV | பக்கத்து வீட்டில் பிரச்சனை.. மூதாட்டியை தள்ளிவிட்டு சுவர்களை இடித்த கும்பல்..
வீட்டுச் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு மூதாட்டியை தள்ளிவிட்ட கும்பல்.ஈரோடு மாவட்டம் பவானி அருகே மூதாட்டி ஒருவரின் வீட்டின் சுற்றுச்சுவரை ஒரு கும்பல் கடப்பாரையால் இடித்துத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலவமலை கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு உள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர், விஜயாவின் வீட்டின் பின்புறம் குதித்து, கழிவறையை கடப்பாரையால் அடித்து உடைத்தனர். மேலும், வீட்டின் முன்புற சுவரையும் இடித்துவிட்டு, மூதாட்டியையும் தள்ளிவிட்டு தப்பியோடினர். மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
