Erode Car Chase CCTV | காரில் பறந்த கொள்ளையர்கள் - விடாமல் விரட்டி சென்ற போலீஸ்..
Erode Car Chase CCTV | காரில் பறந்த கொள்ளையர்கள் - விடாமல் விரட்டி சென்ற போலீஸ்..
#Erode #Car #CarChase #Theft #CCTV #TNPolice #ThanthiTV Erode Car Chase CCTV | காரில் பறந்த கொள்ளையர்கள் - விடாமல் விரட்டி சென்ற போலீஸ்.. பரபரப்பு சிசிடிவி வெளியீடு ஈரோட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மர்ம நபர்களை போலீசார் காரில் துரத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிவகிரி அருகே விளக்கேத்தியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சோலார் பகுதியில் காரில் சென்ற நான்கு பேரைப் போலீசார் மடக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர். தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்ற நிலையில், கொடுமுடி அருகே காரணம்பாளையம் ரயில்வே கேட்டில் காரை மோதிவிட்டு நால்வரும் தப்பியோடினர். தப்பிச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
