Erode | Bannari Amman | 200 ft Statue | 200 அடி உயர பண்ணாரி அம்மன் சிலை? | தீயாய் பரவும் தகவல்
Erode | Bannari Amman | 200 ft Statue | 200 அடி உயர பண்ணாரி அம்மன் சிலை? | தீயாய் பரவும் தகவல் #erode #bannariamman #200ftstatue #thanthitv பண்ணாரி அம்மன் கோவிலில் 200 அடி உயர சிலையா? - வதந்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் வளாகத்தில், 200 அடி உயரத்தில் அம்மன் சிலை அமைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்களுடன், கோவில் வளாகத்தில் 200 அடி உயர அம்மன் சிலை அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் பரப்பப்பட்டன. இதனை மறுத்துள்ள கோவில் நிர்வாகம், தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பண்ணாரி அம்மன் கோவிலில் 200 அடி உயர சிலை அமைக்கப்படுவதாகப் பரவும் தகவல் தவறானது என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
