வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுவன்.. மனதை பதற வைக்கும் காட்சி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருசக்கர வாகனம் மோதி, சிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோக காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருசக்கர வாகனம் மோதி, சிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோக காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்தாணி பகுதியை சேர்ந்தவர் தெய்வப்பிரியா. இவர், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலைய பகுதியில், தனது மகன் மற்றும் மகளுடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது. அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி, தெய்வப்பிரியாவின் 8 வயது மகனான ஹர்னீஷ் மீது வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஹர்னீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார், விசாரித்து வருகின்றனர்.
