

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்