

ஈரோடு மேட்டூர் ரோட்டில் உணவகம் நடத்தி வரும் யோகேஷ்வரன் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டவர். இவரது முகநூல் கணக்கில் கடந்த ஆண்டில் சிறுமிகளில் ஆபாச படங்கள் பாலியல் உணர்வுகள் தூண்டும் விதத்தில் உள்ள வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பிரகாஷ் , ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை சோதனை செய்தனர். அப்போது அது யோகேஷ்வரனின் சிம் கார்டு எண் என்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து யோகேஷ்வரனை போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.