

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் நிறுவனர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். கூடிய விரைவில் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.