"துரோகத்தின் அடையாளம்" ஈபிஎஸ்ஸை காட்டமாக விமர்சித்த டிடிவி தினகரன்

x

துரோகத்தின் அடையாளமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, துரோகத்தின் அடையாளமாக அவர் இருப்பார் என்றும் பதில் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்