கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை வேலூர் செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை நாமக்கல் மாவட்டத்திலும், 22ம் தேதி சேலத்திலும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அவர் 23-ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.