மண்டை சூடேறிய பவுன்சர் - புதுவையில் தமிழக இளைஞர் கொடூர கொ*ல

x

புதுச்சேரியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தனியார் கல்லூரியில் படித்து வுரும் மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் என்கிற இளைஞர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 15க்கும் மேற்பட்டோருடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார்.பின்னர் மிஷின் வீதியில் உள்ள மதுபான பாருக்கு சென்று மது அருந்திய நிலையில், ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளனர்.இதனால் வாடிக்கையாளர்கள் அவர்களை வெளியே அனுப்புமாறு நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து பவுன்சர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றியதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பவுன்சர் ஒருவர் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து சென்று கல்லூரி மாணவரையும், பட்டதாரி இளைஞரை குத்தி உள்ளார். இதில் பட்டதாரி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கல்லூரி மாணவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பவுன்சரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்