எண்ணூர் - தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்த இடைக்கால தடை

எண்ணூர் - தூத்துக்குடி பெட்ரோலிய குழாய்களை பதிக்க தனியார் நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் - தூத்துக்குடி பெட்ரோலிய குழாய் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்த இடைக்கால தடை
Published on
எண்ணூர் - தூத்துக்குடி பெட்ரோலிய குழாய்களை பதிக்க, தனியார் நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தூத்துக்குடி சில்கான்பட்டி பகுதியில் சரக்கு முனையம் அமைப்பதற்கு, தங்களது சொந்த நிலத்தில் கட்டுமான பணிகளை தொடங்கியது. இந்நிலையில் எண்ணூர் - தூத்துக்குடி வரை பெட்ரோலியம் மற்றும் கனிமங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மேற்கண்ட உத்தரவு வழங்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com